மதுரை:உயர் நீதிமன்ற மதுரை கிளையில், ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் கோரும் வழக்குகள் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்காக பட்டியலிடப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்களை அழைத்த நீதிபதி, "கூல் லிப்" உள்ளிட்ட போதை பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து, அதனை இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது? என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டிருந்தார்.
அது தொடர்பாக ஹரியானா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த கூல் லிப் உள்ளிட்ட 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.
குட்கா நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 10% குழந்தைகள் ஏதேனும் ஒரு போதை பொருளுக்கு அடிமையாகி உள்ளனர். என அறிக்கை கூறுகிறது. குடும்ப பிரச்சனை, தனிநபர் துன்புறுத்தல்கள் போன்ற காரணங்களால் போதை மருந்துகளுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். கூல் லிப் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை, கோட்பா விதிகளால் முறைப்படுத்தப்படுகிறது. கோட்பா விதிகளின் படி எச்சரிக்கை விடும் வகையிலான வாசகங்கள், புகைப்படங்கள் பாக்கெட்டுகள் மீது அச்சிடப்பட்டுள்ளது" திருடனாய் பார்த்து திருந்த வேண்டும் என்ற பாடல் போல தான் என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:சென்னைக்கு கனமழை எச்சரிக்கை; வேளச்சேரி மேம்பாலத்தில் அணிவகுத்து நிற்கும் கார்கள்!