தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு இறுதித் தீர்ப்புக்காக ஒத்திவைப்பு! - Student Lavanya Suicide Case - STUDENT LAVANYA SUICIDE CASE

தஞ்சாவூர் மைக்கேல்பட்டி கிராமத்தில் உள்ள இமாகுலேட் ஆர்ட் மேரி சபை பள்ளி மாணவி லாவண்யா உயிரிழந்த வழக்கை, இறுதித் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2024, 7:48 AM IST

மதுரை: தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி கிராமத்தில் இமாகுலேட் ஆர்ட் மேரி சபைக்குப் பாத்தியப்பட்ட பள்ளி ஒன்று உள்ளது. கடந்த 1923ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளியில், பல்வேறு மதங்களைச் சேர்ந்த சுமார் 700 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், இங்கு 12ம் வகுப்புப் படித்த மாணவி லாவண்யாவை, மதம் மாறவற்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மாணவி லாவண்யா உயிரிழந்த வழக்கு தொடர்பாக, அந்த பள்ளியின் நிர்வாகியான அருட் சகோதரி (கன்னியாஸ்திரி) சகாய மேரியை காவல்துறை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வந்தார்.
மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்ட நிலையில், சிபிஐ வழக்கை விசாரணை செய்து விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தது.

இதையும் படிங்க: ராமநாதசுவாமி கோயில் பணியிட விவகாரம்: இந்து சமய அறநிலையத் துறையிடம் நீதிபதிகள் சரமாரிக் கேள்வி!

இதற்கிடையே, சகாயமேரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், மாணவி லாவண்யா உயிரிழப்பிற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை, மதம் மாற கோரி யாரும் வற்புறுத்தவில்லை. எனவே இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இறந்து போன மாணவி லாவண்யாவின் அப்பா தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு அவரது தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
அதில், மாணவியைப் படிக்க விடாமல் பல்வேறு வேலைகள் கொடுத்து மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளனர். மேலும், மாணவி அருந்திய விஷம் எளிமையாகக் கிடைக்கக் கூடியது அல்ல. எனவே இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் குற்றப்பத்திரிகை ரத்து செய்யக்கூடாது என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி இளங்கோவன், இறுதித் தீர்ப்பு வழங்குவதற்காக வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details