ஹேமமாலினி ரஜினிகாந்த் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) சென்னை:மிஸ் யுனிவர்ஸ் இந்தியா அமைப்பு சார்பில், டெல்லியில் உள்ள மெரிடியனில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பில், டாக்டர் ஹேமமாலினி ரஜினிகாந்த் தமிழ்நாடு மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் மாநில இயக்குனராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார். 2023ஆம் ஆண்டின் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற நிகரகுவாவைச் சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா அமைப்பின், தமிழ்நாட்டின் முதல் இயக்குனராக நியமிக்கப்பட்ட டாக்டர் ஹேமமாலினி ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த திறமையாளர்களை அடையாளம் காண்பதற்காக அழகுக் கலையில் தனது நிபுணத்துவத்தை வலியுறுத்தி, தற்போது அளிக்கப்பட்டுள்ள வாய்ப்புக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் அழகையும், புத்திசாலித்தனத்தையும் இணைப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். திறமையான பங்கேற்பாளர்கள் இணைவதை வரவேற்பதாக கூறிய அவர், மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவுக்கான வல்லமைமிக்க போட்டியாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வெற்றியாளருக்கு வழிகாட்டும் தனது இலக்கையும் அவர் வெளிப்படுத்தினார்.
போட்டியின் மூலம் இன்றைய சமுதாயத்தில் செல்வாக்கு செலுத்தும் பணியில் தாம் இருப்பதாகவும் கூறினார். மேலும், தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த நான், எதிர்கால மிஸ் யுனிவர்ஸ் தமிழ்நாடு போட்டியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் எனது போட்டி அனுபவத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளேன் என தெரிவித்தார்.
இதையும் படிங்க:தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஸ்கேட்டிங் போட்டிக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் பள்ளி மாணவன்.. தமிழக அரசுக்கு மாணவனின் பெற்றோர் கோரிக்கை! - Tenkasi Student