மதுரை:கடுமையான கோடை வெயில் மதுரையை வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தினந்தொறும் மழை பெய்து வருகின்றது. அதிலும் இன்று பிற்பகலில் கனமழை பெய்தது. இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருகெடுத்து ஓடியது.
இந்நிலையில் மதுரையின் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழை நீர் கழிவுநீருடன் கலந்து வீடுகளுக்குள் போகும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். மதுரை அவனியாபுரம் இமானுவேல் நகர் பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக மழைநீருடன் சேர்ந்து கழிவுநீரும் வீடுகளுக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக அச்சமடைந்துள்ளனர்.