தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறையில் வெடிகுண்டு மிரட்டல்.. பலத்த போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் திமுக நிர்வாகி அலுவலகம்! - death threats to dmk leader - DEATH THREATS TO DMK LEADER

death threats to dmk minority leader in mayiladuthurai: மயிலாடுதுறை திமுக மாவட்ட சிறுபான்மை அணி நிர்வாகி அலுவலகத்தில் இன்று பெட்ரோல் குண்டு வெடிக்கப் போவதாக வாட்ஸ் ஆப்பில் கொலை மிரட்டல் வந்ததையடுத்து, அவரது அலுவலகத்திற்கு போலீசார் பலத்த பாதுகாப்பு போட்டுள்ள நிலையில், அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஷாவலியுல்லாஹ்
ஷாவலியுல்லாஹ் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 17, 2024, 9:20 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட திமுக சிறுபான்மை அணி துணைச் செயலாளராக உள்ளவர் அகமது ஷாவலியுல்லாஹ். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை பூர்வீகமாகக் கொண்ட இவர் சென்னை மற்றும் வெளிநாட்டில் தொழில் செய்து வருகிறார்.

மயிலாடுதுறை மாவட்ட திமுகவில் அடியெடுத்து வைத்த சில மாதங்களிலேயே மாவட்ட திமுக சிறுபான்மை அணி துணைச் செயலாளர் பொறுப்பை பெற்றார். மேலும், குறுகிய காலத்தில் திமுகவினரிடையே கவனிக்கத்தக்க இடத்தைப் பெற்றார். மேலும், கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டினார்.

இவரது திடீர் வளர்ச்சி உள்ளூரில் பல ஆண்டுகளாக அரசியல் செய்து வரும் சிலருக்கு எரிச்சலையும் உண்டாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒன்றரை மாதத்தில் அகமது ஷாவலியுல்லாஹ்வுக்கு தொடர்ந்து வாட்ஸ் ஆப் மூலம் இதுவரை 3 முறை மிரட்டல் வாய்ஸ் மெசேஜ் வந்துள்ளது.

கடைசியாக ஜூலை 14ஆம் தேதி வந்த வாய்ஸ் மெசெஜில் மயிலாடுதுறையில் உள்ள அகமது ஷாவலியுல்லாஹ் அலுவலகத்தில் ஜூலை 17ஆம் தேதி பெட்ரோல் குண்டு வெடிக்கப் போவதாகவும், அதற்கு பிறகும் ஏரியாவில் அரசியல் செய்ய வந்தால் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்குக்கு நடந்ததை விட மோசமான சம்பவம் நடக்கும் என ஆபாச வார்த்தைகளால் திட்டியும் அந்த மெசேஜில் மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து அகமது ஷாவலியுல்லாஹ் தரப்பினர் மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறையில் உள்ள அகமது ஷாவலியுல்லாஹ் அலுவலகத்தில் இன்று பெட்ரோல் குண்டு வெடிக்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அகமது ஷாவலியுல்லாஹ் அலுவலகம் முன்பு அதிநவீன கேமரா பொருத்திய காவல் வாகனம் நிறுத்தப்பட்டு, பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:அமலாக்கத்துறை விசாரணைக்கு ஜாபர் சாதிக் சகோதரர் நேரில் ஆஜர்? நடப்பது என்ன? - Jaffer Sadiq Case

ABOUT THE AUTHOR

...view details