சென்னை: தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதத்தின் மத்திய பகுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கோடை தொடங்கியவுடன் அது உச்சத்தைத் தொட்டது. குறிப்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு வரலாற்றில் இல்லாத அளவில் பல்வேறு பகுதிகளிலும் கோடை வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வெயில் சுட்டெரித்தது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக 20 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் பதிவாகிய சூழ்நிலையில், தற்போது அது தலைகீழாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில், தற்போது தொடர்ந்து வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் தான், இன்றைய தினம் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 106.16 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.