சென்னை: இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “உலக வானிலை அமைப்பு (WMO) வெப்ப அலையை வரையறை செய்துள்ளது. அதன்படி, வெப்ப அலை என்பது சாதாரண வெப்பநிலையிலிருந்து 4.5 டிகிரி செல்சியஸ் முதல் 6.4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிப்பதாகும்.
மேலும், கடுமையான வெப்ப அலையானது இயல்பான வெப்பநிலையிலிருந்து 6.4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். வெப்ப அலை என்பது சாதாரணமான அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் மற்றும் கடுமையான வெப்ப அலை என்பது சாதாரணமான வெப்பநிலையில் இருந்து அதிகபட்ச வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸ் ஆகும்.
காலநிலை மாற்றம் காரணமாக, வெயிலின் தாக்கம் உலகளவிலும் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தினாலும், வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களும் மக்களை அதிகளவில் பாதிக்கின்றன. மேலும், பல்வேறு வெப்பம் தொடர்பான நோய்களை ஏற்படுத்துவதுடன், (HRI), உடலியல் மன அழுத்தம், சில நேரங்களில் மரணத்தையும் ஏற்படுத்துகிறது.