தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் இருந்து கூடுதலாக 1000 பேர் ஹஜ் பயணம்: ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது தகவல்! - Hajj pilgrimage 2024 - HAJJ PILGRIMAGE 2024

Hajj pilgrimage 2024: திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது, இந்த வருடம் தமிழ்நாட்டில் இருந்து 5,637 பேர் ஹஜ் பயணம் செல்ல தயாராக இருப்பதாகவும், அரசின் மானியம் கடந்த‌ ஆண்டை போலவே இந்த ஆண்டும் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 22, 2024, 5:41 PM IST

அப்துல் சமது

திருச்சி: இஸ்லாமியர்களின் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதான புனித ஹஜ் யாத்திரைக்காக ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவின் மெக்கா மதினாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தாண்டு திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஹஜ் செல்வோருக்கான பயிற்சி முகாம் திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி குழு ஒருங்கிணைப்பு சார்பில் இன்று நடைபெற்றது.

இதில் ஹஜ் கமிட்டி மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது மொஷின் சாகிப், ராஜா முஹம்மது, சம்சுதீன், மாமன்ற உறுப்பினர் பைஸ் அஹமது உட்பட பலர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள். அதைத் தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த ஹஜ் கமிட்டி தலைவரும், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது, “வரும் மே 26 ஆம் தேதி முதல் விமானம் ஹஜ் பயணம் மேற்கொள்ள சவூதி அரேபியா புறப்பட உள்ளது.

ஜூலை மாதம் 9 ஆம் தேதி வரை விமானங்களில் இஸ்லாமியர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள சவூதி அரேபியா மக்காவை நோக்கி செல்ல உள்ளனர். இவர்களோடு தன்னார்வலர்களும், அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள தன்னார்வலர்களும் ஹஜ் கமிட்டியோடு இணைந்து செயல்பட உள்ளனர். இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள இதுவரை 5 ஆயிரத்து 637 பேர் செல்ல தயாராக உள்ளனர்.

கணிசமான வகையில் பெண்களும் ஹஜ் செல்ல உள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள பதிவு செய்துள்ளனர். அரசின் மானியம் கடந்த‌ ஆண்டை போலவே இந்த ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது” என்று கூறினார். ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் இந்துக்கள் சொத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுத்து விடுவார்கள் என மோடி பிரச்சாரம் செய்துள்ளார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தல் கமிஷன் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது‌‌ தான் எங்கள் கருத்து என தெரிவித்தார்.

இதையும் படிங்க:சேலம் - சென்னை இடையேயான இண்டிகோ விமான சேவை நேரத்தில் மாற்றம்! - Salem To Chennai Flight Service

ABOUT THE AUTHOR

...view details