சென்னை:அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எச்.ராஜா கூறியது, “கடவுள் இருக்கான் குமாரு என்று சொல்வது போல, ஒரு வாரத்தில் இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நாமக்கல் கவிஞர் மாளிகையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது, 'திராவிடநல் திருநாடு' என்று சொல் விட்டுப்போச்சு. மீண்டும் பாடச் சொன்னதில் சில வரிகள் விட்டுப் போய்விட்டது.
ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தூர்தர்ஷன் பணியாளர்கள் செய்தது சிறிய தவறு. முதலமைச்சர் அதற்கு சாயம் பூசி எக்ஸ் தளத்தில் பதிவு போடுகிறார். முதலமைச்சர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? அவருடைய மகன் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட உங்களுக்கு துப்பு இல்லையா? நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் (திமுக) எறிகின்ற பந்து மீண்டும் உங்களை வந்து தாக்கும்.
இதையும் படிங்க:அமைச்சர் பொன்முடியின் 'திராவிட இயக்கமும் - கருப்பர் இயக்கமும்' நூல் வெளியீடு!