தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கு.. 3 ஆண்டுகளாக இழுத்தடிப்பதாக சிபிஐக்கு எதிராகக் சிறப்பு நீதிமன்றம் கண்டனம்! - Gutka Scam

Gutka Scam Case: முன்னாள் அமைச்சர்கள் உள்ளிடோர் மீதான குட்கா முறைகேடு வழக்கு விசாரணைக்கு, ஒப்புதல் அனுமதி கிடைக்கவில்லை என கூறி மூன்று ஆண்டுகளாக வழக்கை இழுத்தடிப்பதாக சிபிஐக்கு எதிராகச் சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Gutka Scam Case
Gutka Scam Case

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 15, 2024, 4:51 PM IST

சென்னை: தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா பொருள்கள் விற்கப்பட்ட புகாரில் டெல்லி சிபிஐ காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றது. இதில் குடோன் உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேரைக் கைது செய்த சிபிஐ அவர்களுக்கு எதிரான சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த நிலையில், இந்த முறைகேடு புகாரில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி, சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர், உள்ளிட்ட மத்திய மற்றும் மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை முழுமையாக இல்லை என்பதால் பிழையைச் சரி செய்து விசாரணைக்கான ஒப்புதல் ஆவணங்களுடன் மீண்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்தக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு இன்று (ஏப்.15) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்கான ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நீதிபதி மலர் வாலன்டினா, கடந்த மூன்று ஆண்டுகளாக இதே பதிலை மட்டுமே தெரிவிப்பதாகக் கண்டனம் தெரிவித்து, வழக்கின் விசாரணை மே மாதம் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:தமிழகத்தில் தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்.. மீன்கள் விலை உயர வாய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details