சென்னை:பிரான்ஸை தலைமையிடமாகக் கொண்ட டயர் தயாரிப்பு நிறுவனமான மிஷலின், தமிழகத்தின் வாகன டயர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகவும் இருந்து வருகிறது. சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் இதன் தொழிற்சாலை அமைத்துள்ளது. அங்கு லாரி, பேருந்து போன்ற கனரக வாகனங்களுக்கான டயர்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்நிலையில் இந்நிறுவனம் அடுத்த கட்ட விரிவாக்க திட்டத்தில் செயல்படுத்த உள்ளதாக கடந்த ஆகஸ்ட் மாதம் தகவல் வெளியான நிலையில் இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இந்த விரிவாக்க திட்டத்தில், 563 கோடி ரூபாய் முதலீட்டில், கார்களுக்கான பிரீமியம் டயர்களை தயாரிக்க உள்ளதாக நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே 2,840 கோடி முதலீட்டில் இந்த தொழிற்சாலை செயல்பட்டு வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி இந்த தொழிற்சாலை மூலம் 1461 பேர் பணிபுரிந்து வரும் நிலையில் இந்த விரிவாக்க திட்டம் மூலம் கூடுதலாக 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.