சென்னை:சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 40 இடங்களில் மாலை நேரங்களில் மாலை 4.30 முதல் இரவு 8.30 மணி வரை பல்துறை சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு பல் மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், தோல் சிகிச்சை, மகளிர் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மன நல மருத்துவம் போன்ற சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று ஷெனாய் நகர், திருவொற்றியூர், எம்எம்டிஏ காலனி, மணலி, நங்கநல்லூர், செம்பியம், இளங்கோநகர், வியாசர்பாடி சத்தியமூர்த்திநகர், அயனாவரம், எம்எம்ஏ நகர், நுங்கம்பாக்கம் ஆய்வகம், முகப்பேர் கிழக்கு, கோட்டூர்புரம், மதுரவாயல், செம்மஞ்சேரி, விருகம்பாக்கம், கண்ணகி நகர், ஜாபர்கான்பேட்டை, கொண்டித்தோப்பு ஆகிய இடங்களில் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை, புளியந்தோப்பு காசநோய் சிகிச்சை மையம் ஆகிய 21 இடங்களில் இன்று தோல் நோய் சிறப்பு மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.