சென்னை:அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்களிடம் பணி நிரந்தரம் குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து திட்டமிட்டு வருகிற டிச.10 தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்ததுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளியில் பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு போராட்டங்களை தீவிரமாக நடத்தி வருகின்றனர். அப்போதைய போராட்டங்களில் தற்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது நேரடியாக கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஆட்சி அமைந்த உடன் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
மேலும், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுக தேர்தல் அறிக்கையிலும் தெரிவித்திருந்தனர். திமுகவின் தேர்தல் வாக்குறுதியின் 181 நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த ஆண்டு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்ட அனைத்து பகுதிநேர ஆசிரியர்களும் ஒன்றாக இணைந்து வரும் டிச.10ஆம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி, பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பாபு உள்ளிட்டோரை அழைத்து அதிகாரிகள் நேற்று (டிச.6) பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே, தொடர்ந்து திட்டமிட்டபடி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த நடத்த பகுதி நேர ஆசிரியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.