திருப்பத்தூர்:வட தமிழகத்தின் ஜீவாதாரமாக இருக்கும் பாலாற்றில், தோல் தொழிற்சாலைகள் மற்றும் ரசாயன தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ள நிலையில், பாலாற்று படுக்கைகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவது, ஆம்பூர் மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்பூர் நகராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், தார்வழி பகுதியில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள், மறுசூழற்சி செய்யாமல் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, பச்சகுப்பம் பகுதியில் உள்ள பாலாற்று படுக்கைகளில் கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.