தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெம்பக்கோட்டை அகழாய்வில் அலங்காரம் செய்யப்பட்ட சங்கு வளையல் கண்டெடுப்பு! - Vembakottai excavation - VEMBAKOTTAI EXCAVATION

VEMBAKOTTAI EXCAVATION: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை மூன்றாம் கட்ட அகழாய்வில் அலங்காரம் செய்யப்பட்ட சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அலங்காரம் செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சங்கு வளையல்
அலங்காரம் செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சங்கு வளையல் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2024, 12:25 PM IST

விருதுநகர்:வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணியானது நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வுப் பணியில் இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்ட நிலையில் இதுவரையில் சுடு மண்ணால் ஆன காளையின் உருவம், சூது பவள மணியில் திமுலுடன் கூடிய காளையின் உருவம், உடைந்த நிலையில் சூடு மண் உருவ பொம்மை, பெண்ணின் தலைப்பகுதி, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள், உள்ளிட்ட 1600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று தோண்டப்பட்ட குழியில் அலங்காரம் செய்யப்பட்ட முழுமையான சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து அகழாய்வு இயக்குநர் கூறுகையில், "முன்னோர்கள் பொழுதுபோக்கில் ஈடுபட்டதற்கான சான்று மற்றும் தொழிற்கூடங்கள் நடத்தியதற்கான சான்று தற்போது அதிக அளவில் கிடைத்து வருகின்றன.

இந்த நிலையில் கடல் வழியாக சங்கு வளையல்கள் இங்கு கொண்டுவரப்பட்டு வளையங்களை அலங்காரம் செய்து மெருகூட்டி மீண்டும் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதிக அளவில் உடைந்த நிலையில் சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் தற்போது முழுமையான அலங்காரம் செய்யப்பட்ட நிலையில் வளையல் கிடைத்துள்ளது" என்றார்.

இதையும் படிங்க:வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் என்னென்ன?

இதையும் படிங்க:குஜராத்தில் மட்டுமே கிடைக்கும் சூதுபவள கல்மணி பதக்கம் வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த அதிசயம்!

ABOUT THE AUTHOR

...view details