சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டில் "பண்ணை மகளிர் சுய உதவிக் குழுக்கள்" என்ற திட்டத்தை அறிவித்துள்ளார்.
இந்த பண்ணை மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்ற திட்டத்தின் முழு விவரங்களை இத்தொகுப்பில் பார்க்கலாம். பெண்களின் பங்கு வேளாண்மையிலும் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, விதை உற்பத்தி செய்திடப் பண்ணை மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின், மூலம் தோட்டக்கலையின் ஒருங்கிணைப்பில், ஆர்வமுள்ள மற்றும் பயிற்சி பெற்ற சுய உதவிக்குழுக்களைக் கொண்டு 60 தென்னை நாற்றுப்பண்ணைகள் அமைக்கப்பட உள்ளன. 2 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள தென்னை நாற்றுப்பண்ணைகளில் தயாரிக்கப்படும் தென்னங்கன்றுகளை, அரசு தோட்டக்கலைத் துறையினால் கொள்முதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.