சென்னை:நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாளை (மார்ச் 4) கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் புதிய திட்டத்தை துவக்கி வைக்கிறார். அதன்பின், சென்னையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
கல்பாக்கத்தில் புதிய திட்டம் தொடக்கம் மற்றும் சென்னை பொதுக்கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக இந்திய விமானப்படையின் தனி விமானத்தில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, மார்ச் 4ஆம் தேதியான நாளை மதியம் 1.15 மணிக்கு புறப்பட்டு, சென்னை பழைய விமான நிலையம் வந்தடைகிறார்.
மாலையில் மீண்டும் தனி விமானத்தில் சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து, தெலங்கானா மாநிலம் பேகம்பட் விமானநி லையத்திற்குப் புறப்பட்டுச் செல்கிறார். பிரதமர் மோடி வருகையால், சென்னை பழைய விமான நிலைய பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, நாளை மதியம் இந்திய விமானப்படை தனி விமானத்தில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து புறப்பட்டு, பிற்பகல் 2.45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைகிறார். உடனடியாக பிற்பகல் 2.50 மணிக்கு, இந்திய விமானப்படை தனி ஹெலிகாப்டரில், பிரதமர் மோடி புறப்பட்டு, மாலை 3.20 மணிக்கு கல்பாக்கம் சென்றடைகிறார். அதன்பின்பு, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மாலை 3.30 மணியிலிருந்து 4.15 மணி வரை நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் புதிய திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
அதன் பின்னர், மாலை 4.30 மணிக்கு கல்பாக்கத்தில் இருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு பிரதமர் மோடி, மாலை 5 மணிக்கு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஹெலிபேடில் வந்து இறங்குகிறார்.