தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தப்பியோடிய போக்சோ வழக்கு குற்றவாளி.. 5 மாதங்களுக்குப் பிறகு ஆந்திராவில் சிக்கியது எப்படி? - சிறுமி பாலியல் வழக்கு

Kanyakumari POCSO case: கன்னியாகுமரி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை கைதி தப்பியோடிய நிலையில், 5 மாதங்களுக்குப் பின்னர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டு மீண்டும் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Kanyakumari POCSO case
சிறுமி பாலியல் வழக்கில் தப்பியோடிய குற்றவாளி கைது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 9, 2024, 12:46 PM IST

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் டீமாஸ்டர் சிவக்குமார் என்ற சுடலையாண்டி. இந்த நிலையில், இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் 17 வயது சிறுமியை, அவரது பெற்றோருக்கு தெரியாமல் கடத்தி, அண்டை மாநிலமான கேரளாவிற்குக் கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

2 நாட்களாக எங்கு தேடியும் தனது மகள் கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதனிடையே, சிறுமியை கடத்திச் சென்ற அந்நபர் மீண்டும் ஊரின் ஒருபகுதியில் கொண்டு வந்து விட்டுள்ளார். இதனையடுத்து வீடு திரும்பிய சிறுமியின் உடல்நிலை மோசமாக இருந்ததால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக பெற்றோரிடம் கூறியுள்ளதாக தெரியவருகிறது. பின்னர், தனக்கு நடந்தவற்றைக் கூறிய சிறுமி பெற்றோரிடம் கதறி அழுதுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சிவக்குமார் மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது அவரை செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இதன் பின்னர், மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அவரை நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் கழிவறைக்கு செல்வதாகக் கூறிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இது தொடர்பாக பின்னர், தலைமைக் காவலர் பிரேம்குமார் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசித் தேடிவந்தனர். போலீசாரின் கஸ்டடியில் இருந்த போக்சோ குற்றவாளி தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கிடையே, சம்பந்தப்பட்ட 2 காவலர்களை, அப்போதைய காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தற்காலிகப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் தப்பியோடிய சிவக்குமாரைப் பிடிக்க 2 தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இதற்கிடையே, இவர் ஆந்திராவில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின்படி, அங்கு விரைந்த கன்னியாகுமரி போலீசார் 5 மாதங்களுக்குப் பின்னர், சிவக்குமாரை கைது செய்து நாகர்கோவிலுக்கு கொண்டு வந்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பூந்தமல்லி இளைஞர் கொலை வழக்கில் மூவர் கைது; தப்பியோடியவர்களுக்கு போலீசார் வலைவீச்சு

ABOUT THE AUTHOR

...view details