தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டை அழகாக்க வந்த ஆர்கிடெக்ட்.. பாலியல் தொல்லை அளித்த வன ஆர்வலர் அதிரடி கைது! - Forest activist arrested - FOREST ACTIVIST ARRESTED

கோவையில் 23 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த இயன்முறை மருத்துவரும், வன ஆர்வலருமான ஆனந்த கிருஷ்ணனை கோவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2024, 8:12 AM IST

கோயம்புத்தூர்: கோவையைச் சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன். இயன்முறை மருத்துவரான இவர், வன ஆர்வலராகவும் இருந்து வருகிறார். மருதமலை அடிவாரத்தில் பெரிய பங்களா ஒன்றை ஆனந்த கிருஷ்ணன் கட்டியுள்ளார். இதற்கான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், அந்த வீட்டினை அழகுபடுத்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான பெண் ஆர்கிடெக்கிடம் (Architect) பணிகளை ஒப்படைத்துள்ளார்.

இவ்வாறு வரும் அந்தப்பெண்ணிடம் ஆனந்தகிருஷ்ணன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதுடன், பாலியல் துன்புறுத்தலும் செய்துள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஆகஸ்ட் மாதம் கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆனந்த கிருஷ்ணனை தொடர்பு கொண்டபோது, அவர் தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், ஆனந்த கிருஷ்ணன் கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள குமளி என்ற இடத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. பின்னர், அங்கு விரைந்த தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த ஆனந்த கிருஷ்ணனை கைது செய்தனர்.

தொடர்ந்து, அவர் கோவை அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இவர் கட்டியுள்ள வீட்டை பல்வேறு பிரபலங்களும், அதிகாரிகளும் பார்வையிட்டு வந்த நிலையில், தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஆண்டு வடவள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்யாத நிலையில், மகளிர் ஆணையத்தின் உத்தரவின் பேரில் தற்போது விசாரணை நடைபெற்று ஆனந்தகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details