சென்னை: உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சியை பயண்படுத்தி உணவு சமைக்கப்படுவதாக எழுந்த புகார் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை செனாய் நகரில் உள்ள உணவுப் பதப்படுத்தும் இடத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் இன்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கெட்டுப்போன நிலையில் இருந்த 800 கிலோ மாட்டிறைச்சி பதப்படுத்தப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், இறைச்சிகளை பறிமுதல் செய்து மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அப்புறப்படுத்தினர்.மேலும் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த கடைக்கு சீல் வைத்தனர். இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதிஷ் குமார் கூறும்போது, "செனாய் நகர் பகுதியில் உள்ள கடையில் ஆய்வு செய்தப்போது, 800 கிலோவுக்கும் மேலான அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசும் விதமாக கெட்டுப்போன மாட்டிறைச்சியை கைப்பற்றி உள்ளோம்.