கன்னியாகுமரி:கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துகுமார் (24) . இவர், திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயின்று பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது உறவினர் திருமணம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கன்னியாகுமரியில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதற்காக முத்துக்குமாருடன் பயின்று வரும் 12 மாணவ, மாணவிகள், நேற்று முன்தினம் கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர். அதனை தொடர்ந்து, நேற்று நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு சென்றுள்ளனர்.
அந்த வகையில், இன்று (திங்கட்கிழமை) காலை பிரபல சுற்றுலா தளமாக லெமூர் கடற்கரையை சுற்றி பார்க்க சென்றுள்ளனர். அப்போது 9 பேர் கடலில் இறங்கி குளித்த நிலையில் அவர்களை ராட்ச அலை இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், அங்கிருந்த மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் கடலில் சிக்கியவர்களை மீட்ட போது, 3 பேர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.