தஞ்சாவூர் :கும்பகோணம் மடத்து தெருவில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் இன்று திடீரென கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனையறிந்த கடையில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். மேலும், தீ விபத்து காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்தது. இதுதொடர்பாக மேலும் விசாரித்து வருகின்றனர்.