சென்னை: நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசு தான். இந்த நிலையில், பட்டாசுகளை எப்படி பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என்பது குறித்து தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மாவட்ட அலுவலர் சரவணன் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, “தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பாக அனைத்து வகை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு வெடிப்பது தொடர்பான விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் முழுமையாக அறிவுரைகளைக் கடைபிடித்து விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாட வேண்டும்.
பட்டாசு வெடிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டியவை:
- பெரியவர்கள் முன்னிலையில் பட்டாசு வெடிக்க வேண்டும்.
- நீண்ட வத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.
- பட்டாசு வெடிக்கும் போது ஒரு வாளியில் தண்ணீரை அருகில் வைத்துக்கொள்ள வேண்டும்.
- செருப்புகளை அணிந்து கொள்ள வேண்டும்.
- ராக்கெட் பட்டாசுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். இல்லையெனில், திறந்தவெளி மைதானத்தில் வெடிக்கலாம்.
- மருத்துவமனை, கோயில், குடிசை வீடுகள் உள்ள பகுதிகளில் பட்டாசு வெடிக்கக் கூடாது.
- அதிகமாக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
- அரசு அறிவித்த நேரத்தில் பட்டாசு வெடிக்க வேண்டும்.