தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூந்தமல்லி அருகே தோல் தொழிற்சாலை குடோனில் தீவிபத்து - Poonamallee godown fire accident - POONAMALLEE GODOWN FIRE ACCIDENT

Fire accident in Chennai: பூந்தமல்லி அருகே உள்ள தனியார் தோல் தொழிற்சாலை குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர்.

Fire accident in Chennai
Fire accident in Chennai

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 7, 2024, 11:36 AM IST

பூந்தமல்லி அருகே தோல் தொழிற்சாலை குடோனில் தீவிபத்து

சென்னை:பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை இயங்கிய வருகிறது. இதில், ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை தொழிற்சாலையில் உள்ள குடோனின் மேல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தால், தொழிற்சாலையில் இருந்த ஊழியர்கள் காயமின்றி பாதுகாப்பாக, உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, ஊழியர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், தீயானது மளமளவென பரவியதால் தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சுமார், மூன்று மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தீயானது கொழுந்து விட்டு எரிந்த நிலையில், கரும்புகை அதிக அளவில் இருந்ததால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில், குடோனில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான மூலப்பொருட்கள் மற்றும் அதிக அளவில் மரப்பலகைகள் தீயில் கருகின. தீயால் கரும்புகை வெளியேறி, தொழிற்சாலை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகினர். இந்த விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா? தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து பூந்தமல்லி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:குழந்தைகளை வெளியே விடாதீர்கள்: மயிலாடுதுறையில் சுற்றித்திரியும் சிறுத்தையின் அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியீடு! - Mayiladuthurai Leopard Photo

ABOUT THE AUTHOR

...view details