தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள ஸ்பிக் நகரைச் சேர்ந்தவர், ஹரிப்பிரியா(28). இவர் ஆயுதப் படையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவர் தூத்துக்குடி 3ம் மைல் பகுதியில் அமைந்துள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.
ஹரிப்பிரியாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நிலையில், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு 2023, ஆகஸ்ட் 20ஆம் தேதி தூத்துக்குடி அருகே உள்ள வேம்பார் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அந்தோணி ஜெனிட் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்தோணி ஜெனிட்டிற்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும்.
இந்நிலையில் ஏற்கனவே ஹரிபிரியாவுக்கும் புதுச்சேரியைச் சேர்ந்த சேர்ந்த நவநீத பிரியா என்ற பெண் காவலருக்கும் இடையே தன் பாலின சேர்க்கை இருந்து வந்துள்ளதாக தெரியவருகிறது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு மதுரையில் நடந்த பெண் கமாண்டோ போலீஸ்-க்கான பயிற்சி முகாமில் கலந்து கொண்டபோது ஹரிபிரியாவிற்கும், நவநீத பிரியாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து நவநீத பிரியா, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஆணாக மாறியதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, தன்பாலின சேர்க்கையால் இவ்விருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டதும் விசாரணையில் தெரியவருகிறது.