சேலம்:பருவமழை காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை சரபங்கா ஆற்றை ஒட்டி இருக்கக்கூடிய 100 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டம் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் ஓமலூர், தாரமங்கலம், எடப்பாடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வறண்ட ஏரிகளை நிரப்ப நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டது.
அதற்கான கட்டுமான பணிகள், ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், தற்போது மேட்டூர் அணையிலிருந்து வெளியேறிய உபரி நீர் முழுமையாக ஏரிகளில் நிரப்பிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக மேட்டூர் அணையில் இருந்து வெளியேறிய நீரை 100 ஏரி நிரப்பும் திட்டத்திற்கு, திருப்பி விடப்பட்டது.
ஆனால் பணிகள் முழுமையாக நடைபெறாததால், பத்து ஏரிகள் மட்டுமே நிரம்பியுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சேலத்தில் முதன்முறையாக துவக்கப்பட்ட உபரி நீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்தி இருந்தால் 100 ஏரிகளும் நிரம்பி இருக்கும் என்றும், அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் காவிரி படுகைகளில் இருந்து வரும் உபரி நீரை அந்தந்த மாவட்டத்திலுள்ள நீர்நிலைகளுக்கு திருப்பி விடும் திட்டத்தை விரிவு படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக இன்று சேலம் மாவட்ட ஆட்சியரிடம் காவிரி உபரி நீர் நடவடிக்கை குழு தலைவர் வேலன் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வேலன் கூறுகையில், 'காவிரி உபரி நீர் திட்டத்தில் ஏரிகளை இணைக்கும் கால்வாய் பணிகள் முழுமை அடையவில்லை. இதனால் 90 ஏரிகளுக்கு காவிரி வெள்ள உபரிநீரை கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.