தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரபல ரவுடி மாட்டு ராஜா அதிரடி கைது.. ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக விசாரணை என தகவல் - Armstrong murder case - ARMSTRONG MURDER CASE

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தீவிரமாக தேடப்பட்டு வரும் ரவுடி புதூர் அப்புவின் நெருங்கிய கூட்டாளியான ரவுடி மாட்டு ராஜாவை, பொங்களூருவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங், ரவுடி மாட்டு ராஜா(கோப்புப் படம்)
ஆம்ஸ்ட்ராங், ரவுடி மாட்டு ராஜா(கோப்புப் படம்) (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2024, 2:21 PM IST

சென்னை:பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 27 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கில் முக்கிய ரவுடிகளான சம்பவம் செந்தில், சீசிங் ராஜா மற்றும் புதூர் அப்புவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, ரவுடி புதூர் அப்புவின் கூட்டாளியான ரவுடி மாட்டு ராஜாவை தனிப்படை போலீசார் பெங்களூருவில் வைத்து கைது செய்துள்ளனர்.

பட்டினம்பாக்கத்தில் மாமுல் வசூலில் ஈடுபட்டு மிரட்டிய வழக்கில் ரவுடி மாட்டு ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். ரவுடி புதூர் அப்புவின் நெருங்கிய கூட்டாளியான ரவுடி மாட்டு ராஜா மீது 2011ஆம் ஆண்டு நடந்த இரட்டை கொலை வழக்கு, கோடம்பாக்கம் கொலை வழக்கு என மொத்தம் இரண்டு கொலை வழக்குகள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மறைந்த ரவுடி மயிலை சிவாகுமாரின் கூட்டாளியாக மாட்டு ராஜா மற்றும் புதூர் அப்பு செயல்பட்டதும் தெரியவந்துள்ளது. ரவுடி புதூர் அப்புவின் நெருங்கிய கூட்டாளி என்பதால் மாட்டு ராஜா விடம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

மேலும், புதூர் அப்புவின் இருப்பிடம் குறித்தும் மாட்டு ராஜாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மாட்டு ராஜாவின் நெருங்கிய நண்பர் புதூர் அப்பு என்பதால் அப்புவின் பெயரை கையில் மாட்டு ராஜா பச்சை குத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரவுடி புதூர் அப்பு கைது செய்யப்பட்ட பின்பே மாட்டு ராஜாவிற்கு ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு உள்ளதா என்று தெரியவரும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ரவுடி மாட்டு ராஜாவை பட்டினம்பாக்கம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள வழக்கறிஞர்கள் தொழில் செய்ய இடைக்கால தடை!

ABOUT THE AUTHOR

...view details