தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி ஆசிரியர்கள் விவகாரம்: அதிரடி ஆய்வில் இறங்கும் பள்ளிக்கல்வித் துறை! - OFFICER ABOUT FAKE TEACHER ISSUE

தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித்துறை, தொடக்க கல்வி துறையின் கீழ் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போலி ஆசிரியர்கள் விவகாரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித் துறை செயலாளர் எச்சரித்துள்ளார்.

பள்ளிக்கல்வி இயக்ககம்
பள்ளிக்கல்வி இயக்ககம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2024, 2:42 PM IST

சென்னை:திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ள பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையை விட கூடுதலாக கணக்கு காண்பித்து, ஆசிரியர்கள் பணியில் இருந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு, வட்டார கல்வி அலுவலர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

வட்டார கல்வி அலுவலர் பணியிடை நீக்கம்:அதனைத் தொாடர்ந்து விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் வட்டார கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கைவிட கூடுதலாக ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதி வழங்கி நியமனம் செய்த கோலியனூர் வட்டார கல்வி அலுவலர் ரவிச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்து தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் உத்தரவிட்டார்.

போலியாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள்:சமீபத்தில் தருமபுரி மாவட்டம் அரூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட இராமியம்பட்டி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த கே. பாலாஜி என்பவர் ஒழுங்காக பள்ளிக்கு வராமலும் தனக்கு பதிலாக வேறு ஒரு ஆசிரியரை போலியாக நியமித்து பணியாற்ற வைத்திருப்பதை கண்டறிந்த தொடக்கக் கல்வித் துறை அவரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது.

வெளிச்சத்திற்கு வரும் முறைகேடுகள்:தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள 31 ஆயிரத்து 366 தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தொடக்க பள்ளிகளில் 10 ஆயிரம் ஈராசிரியர் பள்ளிகள் உள்ளது. பள்ளிகளில் பணிக்கு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் தங்களுக்கு பதிலாக வேறு ஆசிரியர்களை நியமித்து பணியாற்ற வைப்பதாக அதிர்ச்சி தகவல் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்துக் கொண்டிருக்கிறது.

அதிகாரி விளக்கம்:இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி கூறுகையில், “திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ள பம்மத்துகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து காண்பித்து முறைகேடில் ஈடுபட்ட விவகாரத்தில் வட்டார கல்வி அலுவலர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியரரை பணியிட நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”.

“விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் இதே போன்று மாணவர்களின் எண்ணிக்கையை கூடுதலாக அதிகரித்து காண்பித்த விகாரத்தில் வட்டார கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்”.

ஆய்வில் உள்ளோம்:“இந்த முறைகேடு விவகாரங்களை தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித்துறை, தொடக்க கல்வி துறையின் கீழ் உள்ள அனைத்து பள்ளிகளிலும், வட்டார கல்வி அலுவலகங்களிலும் ஆய்வு பணியை செய்ய உள்ளோம். போலி ஆசிரியர்கள் விவகாரமும் தன்னுடைய கவனத்திற்கு தற்போது வந்துள்ளதால், இது குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தவறு செய்த ஆசிரியர்கள் மற்றும் அவர்களுக்கு துணை போன துறை சார்ந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

தொடக்கல்வித்துறை இயக்குநருக்கு கடிதம்:இந்த நிலையில் தொடக்கல்வித்துறை இயக்குனர் நரேஷ் மாவட்டக் கல்வி அலுலவர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், “தருமபுரி மாவட்டம் அரூர் கல்வி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம், இராமியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம் ) ஆசிரியராக பணிபுரிந்து வந்த பாலாஜி பள்ளிக்கு பணிக்கு சரியாக வருகைப் புரியாமல் வேறொரு நபரைக் கொண்டு பாடம் நடத்தியது குறித்து கிராமத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் மற்றும் கல்வி மேலாண்மைக்குழு ஆகியோரிடம் இருந்து புகார் பெற்றப்பட்டது.

இதையும் படிங்க:‘மூஞ்ச பார்த்தாலே தெரிகிறது’ - சமூகத்தை குறிப்பிட்டு இளைஞரை தாக்கிய போலீஸ்!

புகாரின் பேரில் ஆய்வு:அதன் அடிப்படையில் அரூர் மாவட்டக் கல்வி அலுவலரால் செப்டம்பர் 27ஆம் தேதி பள்ளியில் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், இப்புகாரில் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து விட்டதாகவும், அதனால் அவ்வூரிலுள்ள மாணவர்கள் வேறு பள்ளிக்கு சென்று பயிலும் நிலை உருவாகியதால் இந்நிகழ்வினை கண்டித்து ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாறுதல் செய்யுமாறு ஊர் பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டது.

தற்காலிக பணியிடை நீக்கம்: மாவட்டக் கல்வி அலுவலரின் விசாரணையில் K. பாலாஜி (பட்டதாரி ஆசிரியர்) என்பவர் பள்ளிப் பணிக்கு சரியாக வருவதில்லை என்றும் அவருக்கு பதிலாக இல்லம் தேடிக் கல்வியில் பணிபுரிந்து வரும் சிந்துஜா அப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பாடம் நடத்தி வந்துள்ளார் என விசாரணையில் கண்டறியப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில் பாலாஜி தமிழ்நாடு குடிமை பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின்படி, அரூர் மாவட்ட கல்வி அலுவலர் தற்காலிக பணி இடைநீக்கம் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தலைமையாசிரியைக்கு நிர்வாக மாறுதல்:மேலும், அப்பள்ளியில் பாலாஜி என்பவருக்கு பதிலாக மாற்று நபரைக் கொண்டு பாடம் நடத்திய செயலினை உயர் அலுவலர்களுக்கு தெரியப்படுத்தாமல் ஊக்குவித்த தலைமையாசிரியர் நாகலட்சுமி அதே ஒன்றியத்திற்குட்பட்ட தாசம்பைல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு நிர்வாக மாறுதல் அரூர் மாவட்ட கல்வி அலுவலரால் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் நலன் முக்கியம்:எனவே இதுபோன்ற நிகழ்வுகளால் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் பொருட்டு ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் பணியினை மேற்கொள்ளாமல் வெளி நபரைக் கொண்டு மாணவர்களுக்கு கற்பித்தல் பணி நடத்தப்படுவது.

ஆய்வு நடத்தப்படும்:இதுகுறித்து பள்ளி ஆண்டாய்வு மற்றும் பள்ளிப் பார்வையின் போது கண்டறியப்பட்டாலோ அல்லது இது குறித்த புகார்கள், ஏதும் பெறப்பட்டால் கண்டிப்பாக அப்புகார் மீது தனிக்கவனம் செலுத்தி மாவட்டக் கல்வி அலுவலரே (தொடக்கக் கல்வி) விசாரணை மேற்கொண்டு, அந்த விசாரணையில் உண்மை இருப்பின் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு இறுதியாணை பிறப்பிக்க வேண்டும்.
பள்ளிகளில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படும் போது அந்த தகவலை மாவட்டக் கல்வி அலுவலருக்கு அளிக்கத் தவறும் பட்சத்தில் தலைமை ஆசிரியர். மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் ஆகியோர் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்.

ABOUT THE AUTHOR

...view details