திருவண்ணாமலை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஆரணி அருகே உள்ள நேத்தபாக்கம் கிராமத்தில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுகூட்டம் நடைபெற்றது. மத்திய மாவட்ட செயலாளரும், முன்னாள் போளூர் எம்.எல்.ஏ ஜெயசுதா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் இந்து சமய அறநிலை துறை அமைச்சரும், தற்போதைய ஆரணி எம்.எல்.ஏவுமான சேவூர் ராமசந்திரன், "அதிமுக பொதுச்செயலாளர் சட்டமன்ற தொகுதியில் ஜெயலலிதா பிறந்தநாளைக் கொண்டாட வலியுறத்தினார். ஆனால் மாவட்டம் சார்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் மாவட்ட செயலாளர் ஜெயசுதா என்னை வேண்டுமென்றே சில நிர்வாகிகளை வைத்து, விளம்பரம், செய்திதாள், துண்டு பிரசுரம் ஆகியவற்றில் என் படத்தை போடாமல் என்னை புறக்கணித்து வருகின்றார்.
5 மாதத்திற்கு முன்பு நியமிக்கபட்ட மாவட்ட செயலாளர் ஆரணியில் உள்ள சில நிர்வாகிகளை என்படத்தை போட கூடாது என்று அறிவுறுத்தினார். ஆனால் கிளைச் செயலாளர்கள் என் படத்தை போட்டுள்ளனர். மாவட்ட செயலாளர் சில நிர்வாகிகளை தன்னுடைய கட்டுபாட்டில் வைத்து கொண்டு எம்.எல்.ஏவை (என்னை) இருட்டடிப்பு செய்து வருகின்றார். 2 முறை எம்.எல்.ஏவாக உள்ள நான் மக்கள்மன்றத்தில் இந்த நிலைப்பாட்டை எடுத்து வைக்கின்றேன்.