தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு.. மேலும் ஒரு அரசு அதிகாரி பிறழ் சாட்சி..! - false testimony in villupuram court

Ex Minister Ponmudy: முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் மேலும் ஒரு அரசு அதிகாரி பிறழ் சாட்சியாக மாறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ex minister ponmudy quarry case one more false testimony in villupuram court
முன்னாள் அமைச்சர் பொன்முடி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 9:13 AM IST

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று தனது பதவியை இழந்துள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

நீண்ட‌ வருடங்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளாகச் சேர்க்கப்பட்ட அரசு‌ அதிகாரிகள் பிறழ் சாட்சியங்களாக மாறி வருகின்றனர். இதனால் செம்மண் குவாரி வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி சிக்கமாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர்கள் மீதான வழக்குகளைத் தூசி தட்டத் தொடங்கினார்.

இது ஆளும் திமுக தரப்புக்குப் பின்னடைவைத் தந்தது. இந்நிலையில் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு நேற்று (பிப்.28) மீண்டும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மேலும் ஒரு அரசு அதிகாரி பிறழ் சாட்சியாக மாறி உள்ளார். ஏற்கனவே 8 பேர் பிறழ் சாட்சிகளாக மாறிய நிலையில், மேலும் ஒருவர் பிறழ் சாட்சியாக மாறி இருப்பது வழக்கின் விசாரணையை நீர்த்துப்போகச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:அமைச்சர் கொடுத்த விளம்பரத்தில் சீன கொடி.. திமுகவின் தேசப்பற்று குறித்து பிரதமர் விமர்சனம்.. கனிமொழி ரியாக்‌ஷன் என்ன?

ABOUT THE AUTHOR

...view details