சென்னை:தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மதுரையிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் நேற்று (நவ.11) சென்னைக்கு வந்தார். பின்னர் விமானத்திலிருந்து இறங்கி வெளியில் வந்து, நிருபர்களை சந்தித்து பேசிவிட்டு அவருடைய காரில் ஏறி அமர்ந்தார். அப்போது, ஓபிஎஸ் தனது சட்டை பாக்கெட்டுக்குள் இருந்த செல்போன் மாயமானதால், பதட்டம் அடைந்தார்.
பின்னர், அங்கிருந்த போலீசாரிடம், செல்போனை விமான நிலையத்திற்குள் உள்ள விஐபி லவூஞ்சில் மறந்து வைத்து விட்டேன் என அதை எடுத்து வாருங்கள் என்று கூறினார்.
உடனே போலீசார் விமான நிலைய மேலாளரிடம் சென்று தகவல் தெரிவித்தனர். ஆனால், லவூஞ்சில் பன்னீர்செல்வத்தின் செல்போன் இல்லை. இதையடுத்து அவர் பயணம் செய்து வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் தேடிப் பார்த்தபோது அவர் அமர்ந்திருந்த இருக்கையில் செல்போன் இருந்தது. இதையடுத்து விமான ஊழியர்கள் அந்த செல்போனை எடுத்து விமான நிலைய மேலாளர் அறையில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க:சென்னை மழை: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!
ஆனால், விமான நிலைய மேலாளர் உடனடியாக அந்த செல்போனை ஓ. பன்னீர் செல்வத்திடம் கொடுக்க முன்வரவில்லை. விமானத்தில் தவறவிட்ட பொருட்களை திரும்பப் பெறுவதற்கு சில நடைமுறைகள் உள்ளன. அதன்படி தான் கொடுக்க முடியும்.. பயணம் செய்த பயணியின் போர்டிங் பாஸ் வேண்டும். அதோடு அந்தப் பொருளை யாரிடம் கொடுக்கக் கூறுகிறார் என்ற சான்று வேண்டும் என்று மேலாளர் கூறியுள்ளார்.