தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மக்களவைத் தேர்தல் 2024: ஈரோடு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் வெற்றி.. - Lok sabha election result 2024

Erode Election Results 2024 Live Updates: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் வெற்றி பெற்றுள்ளார். மேலும், இந்த தேர்தலில் பிரதான கட்சிகள் பெற்ற வாக்குகள் குறித்து முழு விபரத்தை காணலாம்..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 8:00 PM IST

ஈரோடு தொகுதி வேட்பாளர்கள்
ஈரோடு தொகுதி வேட்பாளர்கள் (GFX Credit -ETV Bharat Tamilnadu)

ஈரோடு:ஈரோடு மக்களவைத் தொகுதிக்கான திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை விட 2,36,566 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வ.எண்வேட்பாளர்கள்கட்சிகள்பெற்ற வாக்குகள்
1. கே.இ.பிரகாஷ் திமுக 5,62,339
2. ஆற்றல் அசோக்குமார் அதிமுக 3,25,773
3. கார்மேகன் நாதக 82,796
4. விஜயகுமார் தமாக 77,911

திராவிட இயக்கம் தோன்றுவதற்கு காரணமான பெரியார் பிறந்த ஊர் என்ற பெருமை ஈரோட்டுக்கு உண்டு. விசைத்தறிகள், ஜவுளித் துறை மற்றும் மஞ்சள் விவசாயத்திவ் சிறந்து விளங்கும் மாவட்டமாகவும் ஈரோடு திகழ்கிறது. ஜல்லிக்கட்டு காளைகளுக்குப் பெயர் பெற்ற காங்கேயமும் இத்தொகுதியில்தான் அமைந்துள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி நடந்து முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் பிரகாஷ், அதிமுக வேட்பாளர். ஆற்றல் அசோக்குமார், பாஜக கூட்டணிக் கட்சியான தமாகா சார்பில் விஜயகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

ஈரோடு மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரையில் இந்த முறை திமுக நேரடியாக போட்டியிடுகிறது. அதிமுகவுக்கு வலுவான வாக்கு வங்கி இருக்கும் தொகுதியாகவும், பாஜகவுக்கும் கணிசமான வாக்கு வங்கி உள்ள தொகுதியாகவும் ஈரோடு உள்ளது. எனவே இங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. தமிழகத்திலேயே அதிக பணம் மற்றும் சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனு தாக்கலின்போது தெரிவித்திருந்த அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடும் தொகுதியாகவும் ஈரோடு உள்ளது.

2019 தேர்தலில் வென்றது யார்?: 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் மொத்தம் 10,53,068 வாக்குகள் பதிவாகின. திமுக சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி 5,63,591 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் மணிமாறன் 3,52,973 வாக்குகளும் பெற்றனர். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சரவணக்குமார் 47,719 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மா.கி.சீதாலட்சுமி 39,010 வாக்குகளும் வாங்கினர். மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி, அதிமுக வேட்பாளர் மணிமாறனை 2,10,618 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டார்.

இதையும் படிங்க:தேர்தல் 2024: திமுக Vs அதிமுக; இருமுனைப் போட்டியில் ஈரோடு தொகுதியை கைப்பற்ற போவது யார்?

ABOUT THE AUTHOR

...view details