ஈரோடு:ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நல்லூர், நொச்சிக்குட்டை, மாதம்பாளையம் ஆகிய ஊராட்சிகளை புன்செய் புளியம்பட்டி நகராட்சியுடன் இணைப்பதாகவும் கொமாரபாளையம், சதுமுகை ஊராட்சிகளை சத்தியங்கலம் நகராட்சியுடன் சேர்ப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கிராம சபை கூட்டத்தில் கண்டனம்: இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள கொமாரபாளையம் ஊராட்சி கிராமசபை கூட்டம் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற்றது. கிராம சபை கூட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நகராட்சி இணைப்புக்கு கண்டனம் தெரிவித்தோடு, கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிமுக எம்எல்ஏ அ.பண்ணாரி பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu) அதிமுக எம்.எல்.ஏ கண்டனம்:இது குறித்து ஈடிவி பாரதிற்கு பேட்டியளித்த அதிமுக பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அ பண்ணாரி கூறுகையில், "இவ்வாறு கிராம ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்தால் கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதன் விளைவாக சொத்துவரி, குடிநீர் கட்டணம், வரைபடம் கட்டணம் உயரும். மேலும் மானாவாரி நிலங்களை நம்பியுள்ள விவசாயிகள் கால்நடை வளர்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க:"தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை காட்டுங்க" - ஈபிஎஸ்-க்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி
நகராட்சியுடன் இணையும் ஊராட்சிகள்:ஒவ்வொரு ஊராட்சியிலும் சுமார் 2 ஆயிரம் பேர் 100 நாள் வேலைத்திட்டத்தின் பயன்பெற்று வரும் நிலையில் ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் திட்டத்தில் வேலை கிடைக்காது. வறுமையில் வாடும் முதியோர் நிலை பரிதாபநிலைக்கு தள்ளப்படும் என்றனர்.
ஊராட்சிகளின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு:மேலும், ஏற்கனவே சத்தியமங்கலம் நகராட்சியில் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. தற்போது பணியாளர்கள் எண்ணிக்கை 50 பேருக்கு 10 பேர் என பற்றாக்குறையாக இருக்கும் போது நகராட்சியுடன் ஊராட்சிகளை சேர்த்தால் பணிச்சுமை அதிகமாகவும், பணிகள் முற்றிலும் பாதிக்கப்படவும் செய்யலாம்.
அது மட்டுமின்றி நகராட்சியில் ஏற்கனவே இருக்கும் காசிக்காடு, புளியங்கோம்பை, பெரியகுளம் அடிப்படை வசதியில்லாமல் 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மேலும் ஊராட்சிப் பகுதிகளை இணைக்கும்போது ஊராட்சி எல்லை 10 கிலோ மீட்டர் தூரம் வரை நீட்டிக்கப்படும்.
தமிழக அரசின் ஒத்துழைப்பு தேவை:இந்த 10 கிமீ தூரம் வரை சுகாதாரப் பணியாளர்கள் தூய்மை பணியை மேற்கொள்ளும் சாத்தியகூறு அதிகபடியாக இல்லை. இதில் ஆடு, மாடு மேய்ச்சல்காரர்கள் பாதிக்கப்படுவார்கள். 10 கிமீ தூரம் வரை குடிநீர் கொண்டு செல்லமுடியாது. எனவே மக்களின் கருத்துகளை கேட்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்