தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை விதிக்க கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு!

O.Panneerselvam: அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வத்திற்கு தடைகோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 22, 2024, 8:47 PM IST

சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால், இவற்றைப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்குத் தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவிற்குப் பதில் மனுத் தாக்கல் செய்யத் தொடர்ந்து தாமதப்படுத்தியதால், அதிமுக பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றைப் பயன்படுத்த ஒ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்ததுடன், தடையை நீக்கக் கோரி தனி நீதிபதியிடம் மனுத்தாக்கல் செய்ய அறிவுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்திருந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பாக இன்று (ஜன.22) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வழக்கறிஞர் கெளதம் ஆஜராகி, ஓ.பன்னீர்செல்வத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீடு வழக்கு உயர் நீதிமன்றத்திலும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ஆராய்ந்த பிறகு, இந்த வழக்கில் வாதங்களை முன்வைக்க வேண்டி உள்ளதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனையேற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையைப் பிப்ரவரி 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:ராமரிடம் மன்னிப்பு.. உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி - அயோத்தி விழாவில் பிரதமர் மோடி!

ABOUT THE AUTHOR

...view details