தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஹலோ.. வீட்டுல யாராவது இருக்கீங்களா" - கதவை உடைத்துக்கொண்டு நுழைந்த யானை! - Elephant Entred in house - ELEPHANT ENTRED IN HOUSE

Elephant Entred in House for Searching Food: கோவையில் உணவு தேடி வந்த காட்டு யானை, கதவை உடைத்துக்கொண்டு வீட்டிற்குள் வர முயன்றது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டுக்குள் நுழைந்த யானை புகைப்படம்
வீட்டுக்குள் நுழைந்த யானை புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 8, 2024, 2:53 PM IST

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் மற்றும் மருதமலை வனப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இவ்வாறு முகாமிட்டுள்ள காட்டு யானைகள், உணவு மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து வருகிறது. அவ்வாறு ஊருக்குள் புகும் காட்டு யானைகள், அரிசி, புண்ணாக்கு போன்றவற்றைச் சாப்பிட்டு வருகிறது.

தற்போது யானை நடமாட்டம் அதிகமாக இருப்பதால், தோட்டத்தில் குடியிருப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், யானைகள் தோட்டத்திற்குள் புகுந்தால் சுயமாக விரட்டக்கூடாது எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், தொண்டாமுத்தூர் அடுத்த வண்டிக்காரனூர் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவரது தோட்டத்திற்குள் நேற்று இரவு இரண்டு யானைகள் புகுந்துள்ளது. பின்னர், அங்குள்ள பயிர்களை சாப்பிட்டு விட்டு, அருகில் தோட்டப் பணியாளர்கள் தங்கியுள்ள குடியிருப்பு அருகே யானைகள் வந்த நிலையில், ஒரு யானை திடீரென வீட்டின் கதவை உடைத்து உணவு தேடியுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், அச்சத்தில் வீட்டின் உட்புறமாக ஒழிந்து கொண்டனர். பின்னர், அந்த யானை அங்கிருந்த அரிசி மற்றும் காய்கறிகளைச் சாப்பிட்டு விட்டுச் சென்றுள்ளது. முன்னதாக, யானை கதவை உடைத்து உணவு தேடியபோது வீட்டின் உள்ளே இருந்தவர்கள் "ஒன்னும் இல்லை போ சாமி அவ்வளவு தான்" என கூறியுள்ளனர். அதனை அருகிலிருந்த மற்றொரு நபர் வீடியோ எடுத்துள்ளார். தற்போது அதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், “வனத்தை ஒட்டிய தோட்டப் பகுதியில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், தோட்டங்களில் யானைகள் புகுந்தால் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரிவிக்கப்படும் பட்சத்தில், வனத்துறையினர் அங்கு வந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: "தேர்தலில் அதிமுகவிற்கு பின்னடைவு இல்லை" - பாஜக வாக்கு குறைய இதுதான் காரணம்.. ஈபிஎஸ் அளித்த விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details