சென்னை:நாடாளுமன்ற தேர்தளுக்கான வாக்குப்பதிவு இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான வாக்கு பதிவு ஒரே கட்டமாக இன்று நடைபெற்று வருகிறது.
தமிழகம் மட்டுமின்றி ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், அசாம் உள்ளிட்ட நாடு முழுவதும் 21 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரேதேசம் என மொத்தம் 102 தொகுதிகளுக்கு இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.
இதற்காக இன்று(வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். வாக்களர்கள் சுலபலமாக வாக்களிக்க வேண்டும் என்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அந்த வகையில் வாக்குச்சாவடியில் வரிசை நிற்பவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை வீட்டில் இருந்தபடியே https://erolls.tn.gov.in/queue/ என்ற இணையத்தில் மூலம் அறிந்து கொள்ளும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதனை எப்படி பார்ப்பது என்பது குறித்து விரிவாக பார்ப்போம்
- முதலில் https://erolls.tn.gov.in/queue/ என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும்
- பின்னர் இந்த தளத்தின் பக்கத்தில் வாக்காளர்கள் தங்களது மாவட்டத்தின் பெயர்,
- தொகுதியின் பெயர் மற்றும் வாக்குச்சாவடியின் விவரத்தை உள்ளிட்டால் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவரின் எண்ணிக்கை குறித்த விவரத்தை அறிந்து கொள்ளலாம்
- இன்று(வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த தளத்தை பயன்படுத்தி வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவரின் எண்ணிக்கை குறித்த விவரத்தை அறிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க:மக்களவைத் தேர்தல் 2024: தமிழ்நாடு முழுவதும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு