ETV Bharat / state

'வீட்டு வேலைக்கு சென்று கல்லூரிக்கு அனுப்பும் பெற்றோர்'.. மாணவர் கொலை வழக்கில் சென்னை ஐகோர்ட் வேதனை!

வீட்டு வேலை செய்து பெற்றோர் படிக்க அனுப்பும் நிலையில், கல்லூரிக்கூட செல்லாமல் மாணவர்கள் அடிதடியில் ஈடுபடுவது வேதனை அளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)
சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

சென்னை: சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த திருத்தணியை சேர்ந்த மாணவர் சுந்தர், கடந்த அக்டோபர் 4ம் தேதி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார். அவரை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு கடந்த அக்டோபர் 9ம் தேதி மாணவர் சுந்தர் மரணம் அடைந்தார். இதையடுத்து, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் சந்துரு என்பவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்திய மாணவர் சங்கம் மற்றும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு இடையேயான ஒற்றுமை குறித்தான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கினர்.

இதையும் படிங்க: மலையரசி பரிசளித்த நீராதாரம்; மணிமுத்தாறு அருவிய மிஸ் பண்ணீராதீங்க!

காவல்துறை தரப்பில், வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக மாணவர்கள் மீது 22 வழக்குகள் பல்வேறு காவல் நிலையத்தில் பதியபட்டுள்ளதாகவும், மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

அப்போது நீதிபதி, குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் அதிகபடியான மாணவர்களின் பெற்றோர்கள் வீட்டு வேலை செய்து படிக்க அனுப்பும் நிலையில், கல்லூரிக்கூட செல்லாமல் அடிதடியில் ஈடுபடுவதாக வேதனை தெரிவித்தார்.

இதையடுத்து, உயர்கல்வி துறை செயலாளரை வழக்கில் இணைத்து உத்தரவிட்ட நீதிபதி, மாணவர்களுக்கிடையேயான மோதல் சம்பவம் தொடர்பாக காவல்துறை மற்றும் ரயில்வே போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்யவும், அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டு, விசாரணையை 26ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.