தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அரசுப் பள்ளிகளில் மே.6 முதல் உயர்கல்வி வழிகாட்டி முகாம்" - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! - higher education guidance camp - HIGHER EDUCATION GUIDANCE CAMP

Higher Education Guidance Camp: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மே 6ஆம் தேதி முதல் 'நான் முதல்வன் திட்டத்தின்' கீழ் உயர்கல்வி வழிகாட்டி முகாம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Higher Education Guidance Camp
Higher Education Guidance Camp

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 26, 2024, 7:46 PM IST

சென்னை:ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் அனைத்து மாவட்டக் கல்வித்துறை அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "2023-2024 ஆம் கல்வியாண்டில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களில் பொதுத் தேர்வுக்கு வாராதவர்கள் எவரெனக் கண்டறிவதற்கும், தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களைத் துணைத் தேர்வு எழுத ஊக்கப்படுத்துவதற்கும், தேர்ச்சி பெற்றவர்கள் உயர்கல்வி குறித்தான வழிகாட்டுதல்களைப் பெறுவது குறித்தும், விழிப்புணர்வு வழங்குவது சார்ந்தும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு சிறப்புக்கூட்டம் மே 3 ஆம் தேதி மதியம் 3 மணி முதல் 4.30 மணி வரை அவசியம் நடத்த வேண்டும்.

'நான் முதல்வன்' உயர்கல்வி வழிகாட்டி: 2022-2023ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 3,99,938 அரசுப் பள்ளி மாணவர்களில், 2,41,177 (60 சதவீதம்) மாணவர்கள் பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்று உயர்கல்வி பயின்று வருவதை UMIS (University Management Information System) மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கல்வியாண்டில் (2023-2024) அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், உயர்கல்வி வழிகாட்டி குழுவின் முதல் கட்டத் திட்டமிடல் கூட்டம் நடத்த வேண்டும். பள்ளிகளில் மே மாதம் 6ஆம் தேதி முதல் உயர்கல்வி வழிகாட்டி முகாம் நடக்க இருக்கிறது.

முகாமிற்கு வராத 11,12ஆம் வகுப்பு மாணவரின் விவரங்களைத் தலைமையாசிரியரிடம் பெற்று அந்த மாணவர்களின் வீட்டிற்கே சென்று மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைத்துப் பயன்பெறப் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் வழிகாட்ட வேண்டும்.

மேலும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவிருக்கும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மற்றும் துணைத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் விவரங்களைத் தலைமையாசிரியரிடமிருந்து பெற்று அவர்களின் வீட்டிற்கே சென்று அவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் உயர்கல்வி பெறுவதற்குத் தேவைப்படும் உதவிகள் என்னவென்பதை கண்டறிந்து பெறப்பட்ட தகவல்களைத் தலைமையாசிரியர் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியரிடம் தெரியப்படுத்த வேண்டும்.

அனைத்துக் குழந்தைகளும் பள்ளியில் 100 சதவீதம் சேர்வதை உறுதி செய்ய வேண்டும். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி அடையாத மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்கள், தங்களது பள்ளியின் பயிற்சி மையங்களில் சேர்ந்து பயில்வதையும், தொடர்ந்து வரும் துணைத் தேர்வு எழுதுவதையும் உறுதி செய்ய வேண்டும்" என அக்கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க:சந்தானத்தின் இங்கு நான் தான் கிங்கு ட்ரெய்லர் வெளியானது! - Inga Naan Thaan Kingu Trailer

ABOUT THE AUTHOR

...view details