சென்னை:அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் வாங்கிய நிதிகள் குறித்த புதிய தகவல்களை எஸ்பிஐ இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வழங்கிய நிலையில், அதனை இந்திய தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக நிதிகளை பெற்று பாஜக முதலிடத்தை வகிக்கிறது. இந்நிலையில், திமுக மொத்தமாக 656.5 கோடி ரூபாயை தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடையாக பெற்றுள்ளது.
அதிலும், குறிப்பாக லாட்டரி கிங் சாண்டியாகோ மார்ட்டினின் பியூச்சர் கேமிங் (FUTURE GAMINGS) நிறுவனத்திடம் இருந்து திமுக 509 கோடி ரூபாய் பெற்று உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு அதிகம் நன்கொடை வழங்கியது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பக்கத்தில்,“லாட்டரி சீட்டு, சூதாட்டம் நடத்தும் FUTURE GAMINGS என்ற நிறுவனத்திடம் 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் மூலமாக திமுக பெற்றுள்ளது இன்று அம்பலமாகியுள்ளது.