தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மாநில அரசு மத்திய அரசிடம் கேட்ட தொகையை வழங்கியதாக நடைமுறை இல்லை" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு! - EPS ALLEGES DMK

EPS ALLEGES DMK: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருள் விற்பனை நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும், ஆனால் அதனை கண்டு கொள்ளாமல் திமுக அரசு இருக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

EPS ALLEGES DMK
EPS ALLEGES DMK

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 27, 2024, 4:00 PM IST

EPS ALLEGES DMK

சேலம்:கொங்கணாபுரம் மற்றும் எடப்பாடி பேருந்து நிலையம் பகுதிகளில் அதிமுக சார்பில் இன்று நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து சர்வ சாதாரணமாக தமிழ்நாட்டில் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதிலும், கஞ்சா போதை ஆசாமிகளின் அராஜகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்களைக் கண்டித்த பெண்களை பட்டாகத்தி கொண்டு தாக்கியுள்ளனர். அதில் 12 பேர் காயம் அடைந்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்களால் நாடு பின்னோக்கிச் செல்கிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டிய திமுக அரசும், காவல்துறையும் கண்டு கொள்ளாமல் உள்ளன. இந்த விவகாரங்கள் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்துகிறது” என்றார்.

மேலும், தொடர்ந்து அவர் பேசுகையில், “முன்பு எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசி வருகிறது. இந்தச் சூழலை எதிர்கொள்ளும் வகையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கருத்து குறித்து இப்போது பேச முடியாது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளதால், அது பற்றி கருத்து தெரிவிக்க இயலாது. தமிழ்நாட்டில் தற்போது தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குடிநீருக்காக மக்கள் சாலைகளில் வந்து போராடுகிறார்கள். இந்தச் சூழலை தமிழ்நாடு அரசு மாற்றிட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

மேட்டூர் அணை மட்டுமல்லாமல், மாநிலத்தில் உள்ள பல்வேறு அணைகள், 8,000 ஏரிகள் ஆகியவற்றை தூர்வார அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, திமுக அரசு குடிமராமத்து திட்டம் என்பதை கிடப்பில் போட்டுவிட்டது. இதனால் தற்போது தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், மேட்டூர் அணை உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடலில் கலந்த உபரி நீரை, சேலம் மாவட்டத்தில் உள்ள 20 சதவீத ஏரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு ஏரிகள் நிரம்பின. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்தத் திட்டம் கிடப்பில் உள்ளது. இது திமுக அரசு செய்த தவறு. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், நல்லது நடக்கும் என்று நினைத்த தமிழ்நாடு மக்களுக்கு திமுக அரசு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. மக்கள் துன்பமும், வேதனையும் அடைந்துள்ளனர்.

மாநில அரசு மத்திய அரசிடம் கேட்ட தொகையை எப்போதுமே வழங்கியதாக நடைமுறை இல்லை. திமுக அரசு மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதும் கேட்ட தொகையை காங்கிரஸ் அரசு வழங்கவில்லை. அதே நிலை தான் இப்போதும்.
ஆனால், மாநில அரசிடம் உள்ள பேரிடர் கால நிவாரண நிதியை முழுமையாக பயன்படுத்திவிட்டு, மத்திய அரசிடம் மாநில அரசு கேட்டுப் பெறலாம்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு.. செட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கும் வாய்ப்பு! - Teachers Recruitment Board

ABOUT THE AUTHOR

...view details