தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

4,100 பேர் அளித்த புகார்.. மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர்பான விசாரணை தொடங்கியது! - Devanathan Yadav Case

சென்னை மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தேவநாதன் யாதவ் கோப்புப்படம்
தேவநாதன் யாதவ் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2024, 7:10 AM IST

சென்னை: மயிலாப்பூர் பர்மனென்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தின் சார்பில் அதிக வட்டி தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கில், தேவநாதனுக்கு ஏற்கனவே 7 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இதில் தேவநாதன், தேவ சேனாதிபதி, சுதிர் ஆனந்த் ஆகிய 3 பேருக்கும் 4 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, மூன்று பேரையும் போலீஸ் காவலில் எடுத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் மூன்று பேரிடமும் விசாரணையைத் தொடங்கினர்.

குறிப்பாக, 4,100 பேர் புகார் அளித்ததைத் தொடர்ந்து நிதி நிறுவனத்தில் முழுமையாக முதலீடு செய்யப்பட்ட தொகை எவ்வளவு என்ற கோணத்திலும், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களாக முதலீடு செய்தவை எவ்வளவு என்ற கோணத்திலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி; இதுவரை 3,814 புகார்கள் வந்துள்ளதாக தகவல்!

வழக்கறிஞர்கள் போராட்டம்:தாம்பரம் அடுத்த சேலையூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ரமேஷ் பாபு. இவர் மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அதே 61 வயது மூதாட்டி சேலையூர் காவல் நிலையத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் ஒன்றை அளித்துள்ளார். இதனையடுத்து, அவர் மீது பெண் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அதற்கு வழக்கறிஞர் 64வது வார்டு உறுப்பினரின் கணவர் விஜய் ஆனந்த் தன் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக அவருடன் வேலை பார்க்கும் மூதாட்டியைக் கொண்டு பொய் புகார் அளித்ததாகவும், முறையான விசாரனை நடத்த வேண்டும் என்றும் ரமேஷ் பாபு சேலையூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக சேலையூர் காவல் நிலையத்தில் இரு தரப்பினரிடமும் உதவி ஆணையர் உரிய விசாரனை நடத்தாமல் பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் கூறி, அதனைக் கண்டித்து தாம்பரம் வழகறிஞர் சங்கத்தினர் நீதிமன்றத்தைப் புறக்கணித்து,நீதிமன்ற நுழைவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details