தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருப்பத்தூர் அருகே காதல் திருமணம் செய்த இளைஞரின் முகத்தில் கத்தியால் தாக்கிய பெண்ணின் தாய்மாமன்! - crime at Tirupattur

Tirupathur crime incident: குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, காதல் திருமணம் செய்து கொண்ட நபரை பெண்ணின் தாய்மாமன் கத்தியால் தாக்கியுள்ள சம்பவம் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகனை திருமணம் செய்யாததால் வெறிச்செயல்
காதல் திருமணம் செய்த வாலிபரின் முகத்தில் கத்தியால் தாக்கிய பெண்ணின் தாய்மாமன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2024, 10:48 PM IST

Updated : Feb 2, 2024, 12:22 PM IST

திருப்பத்தூர்:மூன்று ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட நபரை, பெண்ணின் தாய்மாமன் முகத்தில் பிளேடு மற்றும் கத்தியால் தாக்கி விட்டு தப்பியோடியுள்ள சம்பவம், திருப்பத்தூர் மாவட்ட பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தின்னகாலனி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் தேவா(30). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆஞ்சநேயன் மகள் பூமிகாவை (25) கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதன் காரணமாக, இரு குடும்பத்தாருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததுள்ளது.

இந்நிலையில், இன்று திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள புத்துக்கோவிலுக்கு தம்பதியர் சாமி கும்பிட வந்துவிட்டு திரும்பிச் செல்லும்போது, டோல்கேட் பகுதியில் வழிமறித்த பூமிகாவின் தாய்மாமன் திருமலை மற்றும் ஐந்து பேர் கொண்ட கும்பல், தேவாவின் முகத்தில் பிளேடு மற்றும் கத்தியால் தாக்கி விட்டு தப்பி ஓடி உள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த தேவாவை, நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக தேவாவை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாட்றம்பள்ளி காவல் துறையினர், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விசாரணையில், பூமிகாவின் தாய்மாமன் திருமலையின் மகனுக்கு பூமிகாவை திருமணம் செய்ய கேட்டதாகவும், ஆனால் பூமிகா அதனை மறுத்து தேவாவை காதல் திருமணம் செய்து கொண்டதால், இவ்வாறு கொலைவெறி தாக்குதலில் திருமலை ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், தப்பி ஓடிய திருமலை மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நெல்லையில் மாணவிகளை தவறாக வழிநடத்திய அரசுப் பள்ளி ஆசிரியை போக்சோவில் கைது!

Last Updated : Feb 2, 2024, 12:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details