சென்னை: பிஇ, பி டெக் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பான அங்கீகரிக்கப்படாத தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம் எனவும், தரவரிசை பட்டியலுடன் மாணவர்களின் செல்போன் எண்களை இணைத்து வெளியிட்ட சமூக விரோதிகள் மீது சைபர் க்ரைம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் ஆப்ரகாம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தொழில்நுட்ப கல்வி ஆணையர் ஆப்ரகாம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான இணையதளத்தில் விண்ணப்ப பதிவு மே 5ந் தேதி முதல் தொடங்கி ஜூன் 12ந் தேதி வரை பெறப்பட்டது.
பதிவு செய்யப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2,09,645 சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு 1,97,601 தகுதியான மாணவர்களுக்கான வெளியிடப்பட்டது. ஜூலை 10ந் தேதி தரவரிசை பட்டியல் வெளிப்படை தன்மையுடன் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அதிகாரப்பூர்வ இணையதளமான www.tneaonline.org இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் மாணவர்களின் தரவரிசை எண்(Rank), விண்ணப்ப எண்(Application Number), យ (Name), 5 (Date of Birth), L (Aggregate Mark), வகுப்பு (Community) மற்றும் வகுப்பு தரவரிசை எண் (Community Rank) ஆகிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும், இதில் மாணவர்களின் தொலைபேசி எண்ணோ மற்றும் மாவட்ட விபரமோ எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை. மாணவர்களின் நலனுக்காக கொடுக்கப்பட்ட தரவரிசை தகவல்களை சில சமூக விஷமிகள் தங்களது சுயநலத்திற்காக வேண்டி தவறான தொலைபேசி எண் மற்றும் தவறான மாவட்ட விவரங்களைக் கொண்டு மாற்றி அமைத்து வெளியிட்டது தெரிய வருகிறது.
இணைக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மாவட்ட விவரங்கள் அதிகாரப்பூர்வமான தரவு தளத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மற்றும் மாவட்டங்களின் பெயர்களுடன் 88.34 சதவீதம் பொருந்தவில்லை. இது தொடர்பாக சைபர் க்ரைம் துறைக்கு புகார் அளிக்கப்பட்டு தரவுகளை தவறாக கையாண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆவண செய்யப்படும்.