தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலையிறங்கிய யானைகள்.. ட்ரோன் மூலம் விரட்டிய வனத்துறை! - Elephants drone view - ELEPHANTS DRONE VIEW

Elephants : ஸ்ரீ வில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து கீழே இறங்கிய யானைகளை ட்ரோன்கள் மூலம் கண்காணித்து வனத்துறையினர் விரட்டினர்.

மலையிறங்கும் யானைகள்
மலையிறங்கும் யானைகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2024, 11:28 AM IST

Updated : Sep 1, 2024, 1:14 PM IST

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேகமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வரிசையாக 5க்கும் மேற்பட்ட யானைகள் மலை உச்சியில் இருந்து கீழே இறங்கி வந்தன. யானைகள் பல்வேறு தோப்புகள் வழியாக செண்பகத்தோப்பு சாலைக்கு வந்து நின்றன.

மலையிறங்கும் யானைகள் கழுகுப்பார்வை காட்சிகள் (Vdeo Credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில் மலைப்பகுதியில் இருந்து கீழே இறங்கிய யானைகள் கடந்த இரு தினங்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு சாலையில் நின்று கொண்டு விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்தன. இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் ரேஞ்சர் செல்லமணி தலைமையிலான வனத்துறையினர் யானைகள் நடமாட்டத்தை ட்ரோன்கள் மூலம் கண்காணித்து அவைகளை மீண்டும் மலை உச்சிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் உத்தரவின் படி, யானைகள் நடமாட்டத்தை தொடர்ச்சியாக கண்காணித்து வந்தோம். அதன் அடிப்படையில், நேற்றைய இரவு 9 மணியிலிருந்து யானை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

யானை அதிகார பகுதியில் இருந்து பல கிலோ மீட்டர்களை கடந்து செண்பகத்தோப்பு சாலையில் வரிசையாக நிற்கின்றன. எனவே, இரவு நேரங்களில் செண்பகத்தோப்பு - மம்சாபுரம் சாலையை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் ட்ரோன்களை பறக்க விட்டு யானைகள் நடமாடத்தை தொடர்ச்சியாக கண்காணித்து, மலை உச்சிப் பகுதிக்கு விரட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:கூடலூர் மர்மமான முறையில் பெண் யானை உயிரிழப்பு!

Last Updated : Sep 1, 2024, 1:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details