ஈரோடு:ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து 50 கி.மீ தூரத்தில் உள்ள மாக்கம்பாளையம் என்ற மலைக்கிராமத்துக்குத் தினந்தோறும் இரு முறை அரசு பேருந்து இயக்கப்படுகிறது. கடம்பூர் மலைப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மருத்துவ சேவை, வருவாய் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ் போன்ற பணிகளுக்கும், மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்வதற்கும், இந்த பேருந்தில்தான் பயணிக்கின்றனர்.
மாக்கம்பாளையம் கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்றால் குரும்பூர் பள்ளம், சார்க்கரைப்பள்ளத்தை கடந்துதான் செல்ல வேண்டும். ஆனால் மழை கிராமங்களில் குரும்பூர், சர்க்கரைப்பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் ஏற்படுவதால், அரசு பேருந்து சேவை ரத்து செய்யப்படுகிறது.
சாதுர்யமாக பேருந்தை இயக்கிய ஓட்டுநர் (Credits - ETV Bharat Tamil Nadu) கட்டுமான பணியில் தொய்வு:இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டதையடுத்து 2021ம் ஆண்டு இரு பள்ளங்களில் ரூ.11 கோடி செலவில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு பின் கட்டுமான பணிகள் நிறைவுற்றன. இரண்டாவது பாலமான சர்க்கரைப்பள்ளம் பாலத்தில் 80 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில், கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதையும் படிங்க:தி வெஜிடேரியன் - மரக்கறி ஆன கதை.. மனச்சிக்கலில் இருந்து விடுவித்த நோபல்..!
பேருந்தை சாதுரியமாக இயக்கிய ஓட்டுநர்:இந்தநிலையில் கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்த பலத்த மழை காரணமாக சர்க்கரைப்பள்ளத்தில் திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதற்கிடையே இன்று காலை சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மாக்கம்பாளையம் கிராமத்திற்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது குரும்பூர் பள்ளம் காட்டாற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதைக் கண்ட பேருந்து ஓட்டுநர். சாமார்த்தியமாகப் பேருந்தை இயக்கி காட்டாற்றை மெதுவாகக் கடந்து சென்றார்.
இரண்டு பாலங்களும் விரைவில் கட்டி முடிக்கப்படும்:காட்டாற்று வெள்ளம் ஏற்படும் போது மாக்கம்பாளையம் கிராம மக்களின் பயணம் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்," குரும்பூர் பள்ளம், சர்க்கரை பள்ளம் ஆகிய இரண்டு காட்டாறுகளின் குறுக்கே கட்டப்பட்டுவரும் உயர் மட்ட பாலங்கள் கட்டுமான பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இன்னும் ஒரு மாத காலத்தில் பணிகள் முடிக்கப்பட்டு, பாலம் வழியாக வாகன போக்குவரத்து நடைபெறும்" என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்