சென்னை:உலக மாதவிடாய் சுகாதார தினம் ஆண்டுதோறும் மே 28ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஜெர்மனியில் உள்ள வாஷ் யுனைடெட் (WASH United) தொண்டு நிறுவனத்தால் 2013ஆம் ஆண்டு மாதவிடாய் தினம் தொடங்கப்பட்டு, 2014ஆம் ஆண்டு முதல் இந்த தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் மாதவிடாய் சுகாதார தினத்தின் கருப்பொருள் 'மாதவிடாய்க்கு இணக்கமான உலகம்'என்பதாகும்.
மாதவிடாய் சுகாதார தினம் குறித்து சென்னை ரெலா மருத்துவமனையின் (Rela hospital), மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ துறையின்(Obstetrics and gynaecology department) இணை ஆலோசகர்(associate consultant) மருத்துவர் திவ்யா ஷரோனா கூறியதாவது, "பெண்களுக்கு மாதவிடாய் , ஒவ்வொரு மாதமும் அதாவது 28 நாட்களுக்குள் சுழற்சி முறையில் ஐந்து நாட்கள் இருக்கும். இது குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
விழிப்புணர்வு:மாதவிடாய் சுகாதாரம், மாதவிடாய் பொருட்கள்(Menstrual products) கிடைப்பதன் முக்கியத்துவம், அவற்றை உபயோகிக்கும் முறை மற்றும் சுகாதார மற்றும் பாதுக்காப்பான முறையில் அப்புறப்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
சிடிசி வழிகாட்டுதல்கள்:சிடிசி வழிகாட்டுதலின் படி, (CDC - Centers for Disease Control and Prevention) சானிட்டரி பேட் (sanitary pads) ,டேம்பான்ஸ் (Tampons), மாதவிடாய் கப் (Menstrual cups), மாதவிடாய் டிஸ்க்குகள் (menstrual discs), Period panties, துணி நாப்கின்கள் (cloth napkins) ஆகிய மாதவிடாய் பொருள்கள் உள்ளன.
உபயோகிக்கும் முறை (Method of use) : மாதவிடாய் பொருள்களை உபயோகிக்கும் ஒவ்வொரு முறையின் முன்பாகவும், பின்னரும் முறையாக கையை கழுவுதல் வேண்டும். ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் சானிட்டரி நாப்கின்களை மாற்ற வேண்டும். அதிக ரத்த போக்கு உள்ளவர்கள் 4 மணி நேரத்திற்கு ஒரு முறை நாப்கின்களை மாற்ற வேண்டும். மாதவிடாய் கப் (Menstrual cups) பயன்படுத்துபவர் ரத்த போக்கின் அளவை பொறுத்து 6-8 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றிக்கொள்ளலாம். இவற்றை உபயோகிப்பவர்கள் வெந்நீரில் ஸ்டெரிலைஸ் செய்து பயன்படுத்த வேண்டும்.