விழுப்புரம்:தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பரப்புரை கூட்டம் நடைபெறும் என திமுக அறிவித்திருந்தது. இந்த நிலையில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி பரப்புரை கூட்டம் இன்று (பிப்.16) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார்.
இதற்கிடையில் பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்தை முன்னாள் அமைச்சர் பொன்முடி பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "தமிழக முதலமைச்சர் கூறிவது போல வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் திமுக நிச்சயமாக அமோக வெற்றி பெறும்.