சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் பணிகளைப் பொறுத்தவரை திமுக, கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை, தொகுதிப் பங்கீடு என மிக வேகமாகச் செயல்பட்டு வருகிறது. இதன் அடுத்தகட்ட நகர்வாக, எந்தெந்த தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு என்ற பேச்சுவார்த்தையும் இன்று (மார்ச் 11) மாலை நடத்த திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கடந்த முறை அளித்த தொகுதி எண்ணிக்கைகளை இந்த முறையும் கொடுத்து பெரிய அளவிற்கான சர்ச்சையின்றி தொகுதிப் பங்கீட்டை முடித்துள்ளது. மேலும், கடந்த முறை திமுக கூட்டணியிலிருந்த ஐஜேகே இம்முறை கூட்டணியில் இல்லாததால், திமுக கூடுதலாக ஒரு தொகுதி என 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்த தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மதிமுகவுக்கு வழங்கும் தொகுதிகளில் மாற்றத்தை ஏற்படுத்த திமுக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை கடந்த முறை போட்டியிட்ட நாகை மற்றும் திருப்பூர் தொகுதிகளை இந்த முறையும் வழங்கப்பட உள்ளதாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த முறை போட்டியிட்ட கோவை, மதுரை என அதே தொகுதிகள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கீழ்க்கண்ட 10 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதன்படி,