மதுரை: நடைபெற்று முடிந்த 18வது நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 இடங்களிலும் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளது. தற்போது திமுக கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அக்கட்சியினர் பலரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆதரவாளரான மதுரையைச் சேர்ந்த ப.கோ.பிரபாகரன் என்பவர் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இணைந்து தமிழ்நாட்டில் 40க்கு 40 இடங்களில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாக, கிரிக்கெட்டோடு தொடர்புப்படுத்தி ஒரு போஸ்டரை ஒட்டியுள்ளனார்.