விருதுநகர்:விருதுநகரில் திமுக வடக்கு மாவட்டம் சார்பில் அக்கட்சியின் விளையாட்டு மேம்பாட்டு அணியின் தென் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளரும், எம்பி-யுமான தயாநிதிமாறன் தலைமை வகித்தார். இதில், விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டுகளின் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
விருதுநகர் திமுக ஆலோசனைக் கூட்டத்தில் எம்பி- தயாநிதிமாறன் (Credit - ETV Bharat) திமுக-வை உதயநிதி வழிநடத்துவார்:நிகழ்ச்சியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசுகையில், "எதிர்காலத்தில் திமுகவை தாங்கிப்பிடிக்கும் பொறுப்பு இளைஞர்களுக்குத் தான் உண்டு. எனவே இளைஞர்களின் பங்களிப்பு திமுகவுக்கு அவசியம். திமுகவை அண்ணாவுக்குப் பின்னர் கருணாநிதி, அவருக்குப் பின் மு.க.ஸ்டாலினும், அவருக்கு பின் உதயநிதி ஸ்டாலின் வழிநடத்துவார்" என தெரிவித்தார்.
குலக்கல்வி முறை:எம்பி- தயாநிதி மாறன் பேசுகையில்,"இந்தியாவில் பெரிய அளவில் பெட்ரோல் மற்றும் நிலக்கரி வளங்கள் கிடையாது. ஆனால் மனித வளம் அதிகமாக உள்ளது. இந்த மனித வளத்தை அறிவு வளமாக மாற்ற சமச்சீர் கல்வியைக் கொண்டு வந்தது திமுக அரசுதான்.
அதேபோல் பெண் கல்வியை ஊக்கப்படுத்தியதோடு பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரியை அதிகம் தமிழகத்துக்கு கொண்டு வந்தது திமுகதான். பள்ளியில் இடைநிற்றலே இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் காலை உணவு மற்றும் கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறோம்.
இதையும் படிங்க:"குலத்தொழிலை அனுமதிக்காத திமுகவை ஏன் எதிர்க்கவில்லை?" - வானதி சீனிவாசன் கேள்வி!
ஆனால், புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு கொண்டு வருவதன் நோக்கம் மறைமுகமாக குலக்கல்வியை கொண்டு வருவதுதான். தமிழகத்தை நோக்கி அதிகம் தொழிற்சாலைகள் வருவதற்கு காரணம் படித்த இளைஞர்கள் அதிகம் இருப்பதால் தான். இன்னும் 15 மாதங்களில் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 தொகுதிகளை வெல்ல வேண்டும் என்பதே தமிழக முதலமைச்சரின் இலக்காக உள்ளது.
திமுக 200 தொகுதிகளை கைப்பற்றும்:இதனை சாத்தியப்படுத்த வேண்டும் என்றால் இன்றைய இளைஞர்கள் அதிக அளவில் பயன்படுத்தும் சமூக ஊடகங்களில் பிரசாரங்களுக்கு பயன்படுத்த வேண்டும். திமுக அரசின் நலத்திட்டங்களை, விளையாட்டு மேம்பாட்டு அணியினர் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும்." என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்